தர்மபுரி செப், 11
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேட் 3 குரூப் 7பி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் வட்டாட்சியர் ராஜராஜன் கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கிரேட் 4 குரூப் 8 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறும்.
மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையத்திற்கு செல்ல வேண்டும். கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.