தர்மபுரி செப், 11
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொ.மல்லாபுரம், பி.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பொ.மல்லாபுரத்தில் 58 மாணவர்களுக்கும், துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 240 மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் விஸ்வநாதன், சேகர், நகர செயலாளர்கள் ராஜா, தென்னரசு, பொம்மிடி ஊராட்சி தலைவர் முருகன், தலைமை ஆசிரியர்கள் பழனிசாமி, மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இடும்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இளையராஜா, வேணு, சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.