நெல்லை செப், 10
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது.
இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை மற்றும் பாளை வட்டங்களில் 9 அமைவிடங்களில் 10 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது.
இந்த தேர்வுக்காக 2578 பேர் விண்ணப்பித் துள்ளனர். ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 தேர்வு மையங்களில் நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 3 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களை வீடியோ பதிவு செய்ய 11 பேர் நியமனம் செய்யபட்டுள்ளனர். மேலும் தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.