விருதுநகர் செப், 9
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஏற்பாட்டில் காணொலி காட்சி மூலம் குளத்தை தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் குளத்தை தூர்வாரி கொண்டு இருந்தனர். அப்போது வெண்கலத்திலான பெருமாள் சாமி சிலை ஒன்று இருந்ததை கண்டெடுத்துள்ளனர். சிலை சம்பந்தமாக உடனடியாக வத்திராயிருப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாமி சிலையை பணியாளர்களிடம் பெற்றுக் கொண்டு முறையாக வத்திராயிருப்பு வட்டாட்சியர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் முறைப்படி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விருதுநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.