தர்மபுரி செப், 8
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். உடன் ஆசிரியர்கள், மாணவிகள், அரசு அதிகாரிகள் உள்ளனர்.