நெல்லை செப், 6
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்கிட வேண்டி மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாநகரை சார்ந்த பெரியசாமி என்பவர் அளித்த மனுவில் தங்கள் வீட்டு குடிநீர் தொட்டியில் பாதாளச் சாக்கடை கலக்கிறது. அதனை சரி செய்து தரவும் வேண்டுகோள் விடுத்தார். இக்கோரிக்கைகள் போன்று பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட அலுவர்களிடம் அறிவுறுத்தினார்கள்.
இம்முகாமில் செயற் பொறியாளர் பாஸ்கர், தச்சை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன்,உதவி செயற்பொறியாளர் பைஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.