சென்னை ஜன, 30
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று LTTE தெரிவித்துள்ளது. பிரபாகரனை சீமான் சந்தித்தார் ஆனால் புகைப்படங்கள் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பது வேறு தமிழ் தேசிய போராட்டம் என்பது வேறு எனவும் தெரிவித்துள்ளது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின் சீமானுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.