சென்னை ஜன, 22
100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.