புதுடெல்லி பிப், 9
டெல்லி முதல்வர் அதிஷி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.