சென்னை ஜன, 7
ரஜினியின் கூலி படத்தை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என பட குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நாளில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இரண்டு படங்களின் சூட்டிங் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.