ஹைதராபாத் ஜன, 22
புஷ்பா 2 திரைப்பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களில் ரைடு நடந்து வருகிறது. முன்னதாக தயாரிப்பாளர் தில்ராஜூ வீட்டில் ரைடு நடந்தது குறிப்பிடத்தக்கது.