தென்காசி ஆக, 31
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், தொழிலதிபர் மணிகண்டன், மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.