டிச, 9
Under19 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் ராஜ், செட்டன் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற்று ஒன்பதாவது முறை கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.