நேபாளம் செப், 29
நேபாள நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழையைத் தொடர்ந்து தலைநகர் காட்மண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.