புதுடெல்லி செப், 30
பாதாள சாக்கடை சுத்தம் செய்வதில் 92 சதவீதம் பேர் SC ST, OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள விவரப்படி SC சமூகத்தினர் 68.9% , ST சமூகத்தினர் 8.3 %, OBC சமூகத்தினர் 14.7% பொது பிரிவினர் 8 சதவீதம் பேர் இந்த வேலைகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.