Spread the love

கோவை செப், 28

பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருந்து வழங்கி கௌரவித்தது. இவர்தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை விவாத குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனிமுத்திரையை பதித்தவர் அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்ததாக கூறிய அவர் தனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இறுதி மூச்சு வரையில் சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்ததாகவும் குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு தருணமும் தன் நெஞ்சில் நீங்காமல் பசுமையாக இருக்கும் என நினைவு கூர்ந்ததோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *