புதுடெல்லி செப், 28
சிலி, கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தேபாரத் ரயில்களில் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகை ரயில்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்க 160 முதல் 180 கோடி செலவாகும் நிலையில் இந்தியா 120 முதல் 130 கோடிக்கு உற்பத்தி செய்வதுதான் வெளிநாடுகளின் இறக்குமதி ஆர்வத்திற்கு முக்கிய காரணமாகும். ஜப்பான் புல்லட் ரயில்0-100KPH ஐ அடைய 54 வினாடிகள் ஆகும். ஆனால் வந்தே பாரத் 52 வினாடிகளில் அடையும்.