சென்னை செப், 22
வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுத வேண்டும் என செல்லு ராஜு கூறியுள்ளார். திமுக மீது மக்கள் கோபத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும், இது 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். பேரவைக்கு உதயநிதி வந்தால் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் எழுந்து நிற்பதாகவும் விமர்சித்துள்ளார். எந்த தியாகமும் செய்யாத ஒருவர் துணை முதல்வராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் அவர் சாடினார்.