சென்னை செப், 22
அதிமுகவை ஒன்றிணைய விடாமல் தடுத்து 2026 தேர்தலில் வெல்லலாம் என முதல்வர் ஸ்டாலின் கனவு காண்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அந்த கனவு நிச்சயம் பலிக்காது, அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும் என்றும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அதிமுக அமைக்கும் எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவிப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.