சென்னை செப், 20
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்களை தந்தால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை போல் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் திமுக அமைச்சர்கள் காங்கிரசாரை கண்டு கொள்வதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.