சென்னை செப், 17
தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என ப. சிதம்பரம் கூறியுள்ளார். குறைந்தபட்சம் அரசியல் அமைப்பில் ஐந்து திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்றும், ஆனால் காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்தார்.