புதுடெல்லி செப், 17
மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளில், மூன்றை ஏற்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறினார். பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.