சென்னை செப், 5
குடும்பத்தார் மற்றும் படக்குழுவினருடன் நேற்று இரவு விஜய் ‘GOAT’ திரைப்படத்தை பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அவரது தாய், தந்தை, மனைவி குழந்தைகளும் வெங்கட் பிரபு உள்ளிட்ட படகுழுவினரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள NFDC ல் படம் பார்த்துள்ளார். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னதாகவே அவர் படம் பார்த்ததாக தெரிகிறது.