புதுடெல்லி ஆக, 23
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை அமெரிக்க, ரஷ்ய நாடுகள் உற்று நோக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு அண்மையில் சென்ற மோடி நடுநிலையை நிரூபிக்க உக்கிரைனுக்கு இன்று செல்கிறார். ஆரம்பம் முதல் ரஷ்யாவை இந்தியா ஆதரிப்பதாக குற்றம் சாட்டும் அமெரிக்காவும், இதே போல மோடி உக்கிரைனிடம் என்ன முன்வைக்க போகிறார் என்று ரஷ்யாவும் உற்று நோக்கி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.