புதுடெல்லி ஆக, 18
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டையொட்டி மு. க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி என்றும் தமிழகத்தின் வளர்ச்சி முன்னேற்றத்திலேயே அவர் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவரைப் போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வை தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.