சென்னை ஆக, 18
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளார். இதை எடுத்து விஜய்க்கு நான்காவது முறையாக இப்படத்தில் ஜோடியாக இருப்பதாக செய்திகள் வெளியானது அது தற்போது உறுதியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.