சென்னை ஆக, 18
அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புது கட்டுப்பாடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அவரிடம் துறை சார்பாக வரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதே நேரம் பத்திரிகைகளிடம் தேவையில்லாததை குறித்து பேசக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் பதவி, நடிகர்-நடிகையர் குறித்து பேசியதற்கு கடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.