நெல்லை ஆக, 30
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் சிட்டு குருவி இனம் பெருக மாணவர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம்முகாமிற்கு தேசிய துவக்கப் பள்ளியில் தாளாளர் லலிதா அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராபர்ட் ஸ்டான்லி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மேரிமேகலா வரவேற்றார். முகாமில் சிட்டு குருவி குறித்து குருவிகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து விரிவாக கிரிக்கெட் மூர்த்தி பேசினார்.
மேலும் சிறப்பு விருந்தினராக மணிமுத்தாறு எ ட்ரீ மூத்த ஆராய்ச்சியாளர் மதிவாணன் சிட்டு குருவிகளின் இனங்கள் அதனுடைய தன்மைகள் குறித்து பேசி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குருவி கூடுகளை வழங்கினார். முகாமில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆபேல்சேத், சமூக ஆர்வலர்கள் அன்பு தமிழரசன், லூர்து அந்தோணி, சுகுமார், வீரபுத்திரன் உட்பட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்