நெல்லை ஆக, 30
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7,8-ந் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளி ஸ்டாலின் என்பவர், முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முதலமைச்சர் தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும், கிராமங்களிலும் பார்வையிட்டு மக்களின் குறைகளை தீர்த்து வைக்கின்றார். அதுபோல எங்கள் மாஞ்சோலை பகுதியை நேரில் வந்து பார்வையிட வேண்டும் என முதல்வர் பாதம் தொட்டு கேட்கின்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் மாஞ்சோலை பகுதிக்கும் நேரில் வந்து பார்வையிட்டால் எங்கள் பகுதிக்கு தரமான சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு அதிகாரிகள் செய்து விடுவார்கள். இதன் மூலம் இங்கு வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.