சென்னை ஆக, 14
தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி அரசு செவி சாய்த்து கேட்பதே இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி அதனிடம் பலமுறை வலியுறுத்தியும் அதை சரி செய்ய அக்கட்சி மறுப்பதாக விமர்சித்த அவர், அதிமுகவை உடைக்க வேண்டும் என்பதிலேயே பாரதிய ஜனதா கட்சி கவனம் செலுத்தியது என்றார். இதனாலேயே பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முறித்ததாகவும் அவர் தெரிவித்தார்.