சென்னை ஆக, 11
மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் எதிரொலியாக மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.