புதுடெல்லி ஆக, 11
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி தருவோம் என்றார். இதற்காக போராடும் மாணவர்கள் சிபிஐ விசாரணை கூறினாலும் அதற்கு ஆட்சேபனை இல்லை என்றார்.