புதுடெல்லி ஆக, 11
நாடு முழுவதும் டெங்கு பரவல் 25 முதல் 30% அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளை விட தென் மாநிலங்கள் மத்திய மாநிலங்களில் தான் டெங்கு பரவல் அதிகம் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்க கூடும். ஆதலால் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.