செகந்திராபாத் ஆக, 14
செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில் தற்போது பயணிகள் வசதிக்காக வரும் 21 ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 27ம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.