புதுடெல்லி ஆக, 15
சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன் பெற்றுள்ளதாக கூறினார். 40 கோடி மக்கள்தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்ததாகவும் தற்போது நமது மக்கள் தொகை 140 கோடி உள்ள நிலையில் 2047க்குள் இந்தியாவை வளர்த்த நாடாக மாற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.