சென்னை ஆக, 15
இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை ஒட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடவளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.