புதுடெல்லி ஆக, 11
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர்சிங் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைக்காக 1984 ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.