கேரளா ஆக, 5
2013ல் காங்கிரசின் மத்திய அரசில், உள்துறை இணை அமைச்சராக முள்ளம்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என பதிலளித்துள்ளார். இதே நிலைதான் தற்போது வரை தொடர்வதால் வயநாடு நிலச்சரிவு பேரிடராக அறிவிக்கப்படுவது சந்தேகமே.