கேரளா ஜூலை, 30
கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல் மழை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கனமழை காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருடன் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.