புதுடெல்லி ஜூலை, 27
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.