சென்னை ஜூலை, 30
ராயன் படத்தை மிகச் சிறப்பாக இயக்கி நடித்திருப்பதாக நடிகர் தனுஷை முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் பதிவிட்டுள்ளார் இதற்கு படத்தில் நடித்த சந்திப் கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 26 ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் தனுஷ், ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார்.