புது டெல்லி ஜூலை, 22
நாடாளுமன்றத்திற்கும், செங்கோட்டைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு இயக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது. 2024-25 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டின் போது புகை குண்டுகள் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.