சென்னை ஜூலை, 22
திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் மட்டுமல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளவர்கள் எனக் கூறிய அவர், இது வரக்கூடிய தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் மின் கட்டணத்தை உயர்த்தி திமுக அரசு அனைத்து மக்களுக்கும் சுமையை கொடுத்துள்ளது என்றார்.