சென்னை ஜூலை, 22
வெங்கையா நாயுடுவின் 50 ஆண்டுகால மக்கள் பணிக்காக சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், ஜெயக்குமார் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் இடையே உரசல் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு பேரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் கடைசிவரை இரண்டு பேரும் முகம் கொடுத்து பேசாததுடன் நிகழ்ச்சி முடிந்ததும் அமைதியாக புறப்பட்டு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.