ஜூலை, 22
மகளிர் ஆசிய கோப்பை டி20 ஏபிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா அதிக ரன் ரேட் உடன் உள்ளதால் நேபாள் அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் தோல்வி அடைந்தாலும் எளிதாக அரையிறுதிக்கு சென்று விடும்.