கேரளா ஜூலை, 20
வெளியுறவுத்துறை மத்திய அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்டது. வெளியூரவு அமைச்சக நிர்வாக தலைவரான வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமிக்க முடியும். மாநிலங்கள் வெளியுறவுத்துறை செயலாளர்களை நியமிக்கவும், வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கொள்ளவும் கூடாது. இந்நிலையில் கேரளா தனக்கென தனி வெளியுறவுத்துறை செயலாளரை நியமித்திருப்பது மத்திய அரசின் அதிகாரத்தில் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.