நெல்லை ஆக, 29
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, நாங்குநேரி கிழக்கு, மத்திய, மேற்கு வட்டாரம், பாளையங்கோட்டை தெற்கு வட்டாரம் ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ரவீந்திரன் ராமஜெயம், வாகைதுரை, நளன், மற்றும் மாநில மகிளா காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சி நிர்வாகிகள், சங்கனாங்குளம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.