சென்னை ஜூலை, 9
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.