சென்னை ஜூலை, 7
மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஆராய்ந்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜெயச்சந்திரன் இந்த வழக்கிலிருந்து அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி மற்றும் மூன்று மகன்கள் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்ததோடு 1991 முதல் 1996 பதவிக்காலத்தில் அவர் சேர்த்து சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.