சென்னை ஜூலை, 4
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 1998 இல் அதிமுக அமைச்சராக இருந்தபோது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இந்நிலையில் மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற ஆதரவாளர்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. எனினும் இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.